கூகுள் நிறுவனமானது, ஜெமினி என்ற அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு அமைப்பை அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பானது அல்ட்ரா, ப்ரோ மற்றும் நானோ ஆகிய மூன்று தனித்துவமானப் பயன் முறைகளை அறிமுகப்படுத்துகிறது.
இது தற்போது பார்ட் எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடு மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது என்பதோடு இது பிக்சல் வகை கைபேசிகளிலும் கிடைக்கப் பெறுகிறது.
கூகுள் நிறுவனமானது, OpenAI நிறுவனத்தின் ChatGPT என்பதுடன் போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.