அரசு, வியாபாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் மீதான எதிர்கால விவாதத்தை மேலும் அதிகப்படுத்த “அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவு” என்று அழைக்கப்படும் உலகின் முதன்மையான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை ஐக்கிய அரபு அமீரகம் நடத்த இருக்கின்றது.
இம்மாநாடு சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union - ITU) மற்றும் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (World Intellectual Property Organisation - WIPO) ஆகியவற்றின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவிற்கான ஐக்கிய அமீரகத்தின் தேசியத் திட்டத்தால் பொலிவுறு துபாய் என்ற நிறுவனத்தின் உத்திசார் பங்களிப்புடன் நடத்தப்படும்.