TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய துல்லிய வேளாண்மை

May 13 , 2018 2387 days 750 0
  • நிதி ஆயோக் மற்றும் ஐ.பி.எம். நிறுவனம் ஆகியவை உயர் லட்சிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு உண்மை நேர ஆலோசனையை வழங்குவதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய பயிர் சாகுபடி கணிப்பு மாதிரியை உருவாக்குவதற்கான நோக்க அறிக்கையில் (Statement of Intent – SoI) கையெழுத்திட்டுள்ளன.
  • இத்திட்டத்தின் முதல் கட்டமானது அஸ்ஸாம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள 10 உயர் லட்சிய மாவட்டங்களுக்கு இந்த மாதிரியை உருவாக்குவதன் மீது கவனம் செலுத்தும்.
  • இந்தத் திட்டத்தின் நோக்கமானது மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு புத்தாக்கங்களின் அடிப்படையிலான பூச்சி/நோய் பரவலின் முன்கூட்டிய எச்சரிக்கை, பயிர் கண்காணிப்பை அடையாளம் காணும் அமைப்பு, வானிலையை அறியும் ஆற்றல் கொண்ட வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல் ஆகும். மேலும் அவற்றை, வேளாண் மக்களுக்குக் கிடைக்கச் செய்தலையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்