சீனா தனது "செயற்கைச் சூரியன் உருவாக்கச் செயல்முறையை" முன்னேற்றம் அடையச் செய்வதற்காக அணுக்கரு இணைவுப் பரிசோதனையை நடத்தியது.
மேம்பட்ட மீக்கடத்தல் டோகாமாக் வெப்பமாக்கல் அமைப்புச் சோதனையானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹெஃபி இயற்பியல் அறிவியல் கல்வி நிறுவனம் மூலம் தொடங்கப் பட்டது.
செயற்கைச் சூரியன் அல்லது இணை வெப்பமாக்கல் அமைப்பினை வெப்பம் மிகுந்ததாகவும் நீடித்ததாகவும் மாற்றுவதற்கான ஒரு நோக்கத்துடன் EAST என்ற வெப்பமாக்கல் அமைப்புச் சோதனையானது நடத்தப்பட்டது.
டோகாமாக் அமைப்பானது ஹைட்ரஜன் ஐசோடோப்புகளை பிளாஸ்மாவாக மாற்றி, பின்னர் அவற்றை ஒன்றாக இணைத்து ஆற்றலை வெளியிடுவதற்கு மிக அதிக வெப்ப நிலையைப் பயன்படுத்துகிறது.