TNPSC Thervupettagam

செயலிழந்த ராக்கெட்டுகளை இஸ்ரோ மீண்டும் பயன்படுத்தல்

December 21 , 2018 2038 days 562 0
  • வரலாற்றிலேயே முதன்முறையாக இஸ்ரோவானது செயலற்ற ராக்கெட்டுகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
  • PSLV (Polar Satellite Launch Vehicle) அல்லது துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் இறுதி நிலையை விண்வெளி ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவதற்கான இந்த புதிய தொழில்நுட்பத்திற்காக அப்பணியை தற்போது இஸ்ரோ மேற்கொள்கிறது.
  • 2019 ஜனவரியில் மைக்ரோசாட் செயற்கைக் கோளை முதன்மையான செயற்கைக் கோளாக சுமந்து செல்லும் PSLV C-44 ராக்கெட்டை செயல் விளக்கம் செய்வதற்காக அனுப்பத் திட்டமிடப் பட்டிருக்கின்றது.
  • இந்த மைக்ரோசாட் செயற்கைக் கோளானது விண்வெளியில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் 6 மாதத்திற்கு ராக்கெட்டின் இறுதிநிலையை செயல்பாட்டில் வைப்பதற்காக உள்ளடங்கிய மின்கலன்கள் மற்றும் சூரிய ஒளி தகடுகளைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்