TNPSC Thervupettagam

செயல்திறன் தரப்படுத்துதல் குறியீடு

July 14 , 2023 375 days 227 0
  • மத்தியக் கல்வி அமைச்சகம் ஆனது 2020-21 & 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டச் செயல்திறன் தரக் குறியீடு (PGI-D) மீதான ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியக் கல்வி அமைப்பானது உலகிலேயே மிகப் பெரிய ஒன்றாகும்.
  • இது சுமார் 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 26.5 கோடி மாணவர்களைக் கொண்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி 10 தர நிலைகளின் கீழ் மாவட்டங்கள் வகைப்படுத்தப் பட்டு உள்ளன.
  • குறிகாட்டி வாரியான மாவட்டச் செயல்திறன் தரக் குறியீட்டு மதிப்பெண் ஆனது, ஒரு மாவட்டத்தின் மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளை வெளிக் கொணர்கிறது.
  • நாட்டின் எந்த மாவட்டத்தினாலும் இந்தக் குறியீட்டின் முதல் இரண்டு தர நிலைகளை (தக்ஷ் மற்றும் உத்கர்ஷ்) அடைய முடியவில்லை.
  • பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய இரண்டு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் மட்டுமே பிரசெஸ்டா -2 என்ற தரநிலையினை (மதிப்பெண் 641-700) பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்