TNPSC Thervupettagam

செய்தி இணைய வாயில்களை ஒழுங்குபடுத்த குழு

April 12 , 2018 2418 days 818 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் செய்தி இணைய தளங்கள், பொழுதுபோக்கு இணைய தளங்கள் மற்றும் ஊடகத் தொகுப்பாளர்கள் உட்பட நேரடியான இணைய வாயில்களை (Online Portals) ஒழுங்குப்படுத்த 10 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.
  • இந்தக் குழுவானது உள்துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், சட்ட விவகாரங்கள், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளின் செயலாளர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
  • My Gov என்ற இணைய தளத்தின் தலைமை செயல் அதிகாரி, இந்திய பத்திரிக்கைக் குழுவின் பிரதிநிதி மற்றும் தேசிய ஒளிபரப்பு சங்கத்தின் பிரதிநிதி ஆகியோரும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
  • இந்தக் குழு நேரடி (இணையதள) தகவல் பரப்பு முறைகளை ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரத் திட்டம் தீட்டுகிறது.
  • தற்சமயம் அச்சு மற்றும் மின்னணு ஊடகம் இரண்டும் முறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இணையதள ஊடகம் (பொழுதுபோக்கு இணையதளங்கள் உள்பட) எந்த ஒரு ஒழுங்குமுறை அமைப்பின் கீழும் கொண்டு வரப்படவில்லை.
  • தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், 1994ம் ஆண்டு கேபிள் டிவி வலையமைப்பு விதிமுறைகளின் கீழ் (Cable Television Rules - 1964) நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கான விதிகளின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • அதே போல் தனிச் சுதந்திர அமைப்பான இந்தியப் பத்திரிக்கைக் குழுவானது அச்சு ஊடகத்தை முறைப்படுத்துகிறது.

முறைப்படுத்துவதற்கான  தேவை

  • நேரடியாக அல்லது இணையம் வழியாக தகவல்களை பரப்புவதற்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் சமூக ஊடக நடைமுறைகள் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத் தொடர்பு துறையின் மேற்பார்வையின் கீழ் வருகின்றது.
  • செய்திகள், பொழுதுபோக்கு, திரைப்படங்கள், இசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் இவை (சமூக ஊடகங்கள்) வருவதில்லை.
  • இணைய தளத்தில் போலியான தகவல்கள் அல்லது செய்திகள் பரவுதலைத் தடுக்க ஒரு வழிமுறையைக் கொள்ள வேண்டுமென அரசு கருதுவதால், நேரடி இணையதள செய்திகளை கட்டுப்படுத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்