TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 7 , 2017 2604 days 906 0
  • 2017 ஆம் ஆண்டிற்கான உலக இளைஞர் மன்றம் எகிப்து நாட்டிலுள்ள ஷராம்-அல்-ஷேக் நகரில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை எகிப்து நாட்டின் அதிபர் அப்துல்லா பத்தா அல்-சிசி துவங்கி வைத்தார். இந்தியா சார்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) கர்னல் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் கலந்துக் கொண்டார்.
  • இந்திய இராணுவம் சுதந்திரமான, முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு பயிற்சி முனையத்தினை [Joint Training Node – JTN] சில்லாங் நகரத்திலுள்ள உம்ரோய் இராணுவ முகாமில் (Cantonment) துவங்கியுள்ளது.
  • இந்தியாவின் புதிய நிதித்துறை செயலாளராக ஹஷ்முக் ஆதியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டின் பணிப்பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாவார். இவர் தற்சமயம் வருவாய்துறைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நிதித்துறை அமைச்சகத்தின் மிக மூத்த அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்