2017 ஆம் ஆண்டிற்கான உலக இளைஞர் மன்றம் எகிப்து நாட்டிலுள்ள ஷராம்-அல்-ஷேக் நகரில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை எகிப்து நாட்டின் அதிபர் அப்துல்லா பத்தா அல்-சிசி துவங்கி வைத்தார். இந்தியா சார்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) கர்னல் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் கலந்துக் கொண்டார்.
இந்திய இராணுவம் சுதந்திரமான, முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு பயிற்சி முனையத்தினை [Joint Training Node – JTN] சில்லாங் நகரத்திலுள்ள உம்ரோய் இராணுவ முகாமில் (Cantonment) துவங்கியுள்ளது.
இந்தியாவின் புதிய நிதித்துறை செயலாளராக ஹஷ்முக் ஆதியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டின் பணிப்பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாவார். இவர் தற்சமயம் வருவாய்துறைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நிதித்துறை அமைச்சகத்தின் மிக மூத்த அதிகாரி ஆவார்.