பெண் ஊழியர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக தண்டனை விதிக்கும் விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் எட்டு வாரங்களுக்குள் திருமதி ஜானுக்கு 60 இலட்சம் ரூபாயினை இழப்பீடாக வழங்குமாறு மத்திய அரசுக்கு அது உத்தரவிட்டுள்ளது.
இராணுவ செவிலியர் பணியின் (MNS) நிரந்தர ஆணைய அதிகாரி (படைப்பிரிவின் நிலையான பணி நிலைப் பெற்றவர்) முன்னாள் லெப்டினன்ட் செலினா ஜான் 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராணுவப் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார் என்பதற்காகவும், வருடாந்திர இரகசிய மதிப்பீட்டு அறிக்கையில் (ACR) குறைந்த மதிப்பெண் பெற்றதாகவும் கூறி அவர் பணி நீக்கப்பட்டதாக அந்த உத்தரவில் கூறப் பட்டது.
1977 ஆம் ஆண்டில் இராணுவ விதிமுறைகளில் சேர்க்கப்பட்ட விதியின் படி , "இராணுவ செவிலியர் பணி நீக்கம்" ஆனது ஒருவர் அந்தப் பணிக்குத் தகுதியற்றவர் என்று மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கை, திருமணம் செய்து கொள்வது மற்றும் தவறான நடத்தை ஆகிய மூன்று காரணங்களால் மேற்கொள்ளப் படும்.