பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அரசு ரேஷன் கடை அல்லது பொது விநியோக கடைகள் மூலம் வழங்கப்படும் கோதுமையில் ஆபத்தான அளவில் அதிக அளவு செலினியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செலினியம் ஆனது, நமது உடல்கள் ஆக்ஸிஜனேற்றச் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
ஆனால், உடலில் அதன் அதிகப்படியான அளவு ஆனது செலினோசிஸ் என்ற நிலைக்கு வழிவகுக்கும் என்பதோடு இது முடி உதிர்தல், எளிதில் உடையக் கூடிய நகங்கள், தோல் பிரச்சினைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
கழுவப்படாத கோதுமையில் ஒரு கிலோவிற்கு சுமார் 14.52 மி.கி செலினியம் இருப்பது கண்டறியப் பட்டது என்ற நிலையில் கழுவப்பட்ட கோதுமையில் கூட ஒரு கிலோவிற்கு 13.61 மி.கி செலினியம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இவை கோதுமையில் இயல்பாக இருக்க வேண்டிய கிலோவிற்கு 1.9 மில்லி கிராம் என்ற பாதுகாப்பான அளவை விட சுமார் எட்டு மடங்கு அதிகமாகும்.
இந்த பகுதியின் மலைத்தொடரின் பாறைகளில் இயற்கையாகவே செலினியம் உள்ள நிலையில் மழைக்காலத்தில், இந்தப் பாறைகளைக் கரைத்து வழிந்தோடும் மழைநீர் செலினியம் நிறைந்த வண்டல்களைக் கடத்திச் செல்கிறது.
இந்த வண்டல்கள் என்பது தண்ணீரில் கரைந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வேளாண் நிலங்களில் ஓடி, அந்தப் பகுதியில் உள்ள மண்ணில் செலினியத்தின் அளவினை மிக நன்கு அதிகரிக்கின்றன.