TNPSC Thervupettagam

செல்ஃபிங் சிண்ட்ரோம்

December 31 , 2023 201 days 173 0
  • பிரான்சின்  தலைநகரான பாரீஸில் குறைவான மகரந்தச் சேர்க்கைக் காரணிகளை ஈர்ப்பதற்காக குறைவான தேன் மற்றும் சிறிய பூக்களை உற்பத்தி செய்து, வளரும் ஒரு பூவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையானது குறைந்து வருவதால் குறைவான மகரந்தச் சேர்க்கை காரணிகளை ஈர்ப்பதற்காக வேண்டி அந்தத் தாவரமானது தன்மகரந்தச் சேர்க்கைக்குப் பரிணமித்துள்ளது.
  • தானாகக் கருவுறல் நிலையின் இந்த ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சியானது தாவர மகரந்தச் சேர்க்கைக்கான தொடர்புகளை அச்சுறுத்துகிறது.
  • தன்மகரந்தச் சேர்க்கை என்பது தாவரங்கள் தானே தங்களைப் பெருக்கிக் கொள்ளும் செயல்முறையாகும்.
  • அவை பொதுவாக இனப்பெருக்கம் செய்வதற்கான மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகளை நம்பியுள்ள நிலையில், இந்த நடத்தையானது ஆஞ்சியோஸ்பெர்ம்களின் மரபுக்கு முரணானது என்பதோடு, இவை இயற்கையில் ஒன்றோடொன்று மிகவும் இணைக்கப் பட்ட உறவினையும் பாதிக்கிறது.
  • 100 மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் இந்த இடையூறுகளானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • இது பூச்சிகளின் வீழ்ச்சியை துரிதப்படுத்தலாம் என்பதோடு அது தாவரங்களின் எண்ணிக்கையை மிகவும் குறைவான மாறுபாடு கொண்டதாகவும், சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு மிகவும் பாதிக்கப்படக் கூடியதாகவும் ஆக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்