TNPSC Thervupettagam

செல்லுபடியாகாத மற்றும் செல்லத்தகாத திருமணங்களுக்கான மரபுரிமை

September 5 , 2023 321 days 187 0
  • செல்லுபடியாகாத மற்றும் செல்லத்தகாத திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தை மிதாக்சரா என்ற சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு கூட்டு இந்துக் குடும்பத்தின் பெற்றோரின் சொத்தில் பங்கினை பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • மேலும், அத்தகையக் குழந்தைக்கு அந்த குடும்பத்தில் உள்ள வேறு எந்த நபரின் சொத்துக்களின் மீது எந்தவித உரிமைகளும் இருக்காது என்றும் தெளிவு படுத்தி உள்ளது.
  • செல்லுபடியாகாத திருமணம் என்பது ஒரு கணவன் அல்லது மனைவியால் ஒரு தீர்மானத்தின் மூலம் செல்லாததாக அறிவிக்கப்படும் திருமணமாகும்.
  • செல்லத்தகாத திருமணம் என்பது ஆரம்பத்திலேயே செல்லுபடியாகா தன்மையினை கொண்டது.
  • இந்துக் கூட்டுக் குடும்பங்கள் தொடர்பான மிதாக்சரா வாரிசுரிமைச் சட்டம் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் தவிர இந்தியா முழுவதும் பொருந்தும்.
  • இந்து திருமணச் சட்டத்தின் 16வது பிரிவானது, செல்லுபடியாகாத மற்றும் செல்லத் தகாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சட்டரீதியிலான, சட்டப்பூர்வ அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்