TNPSC Thervupettagam

செவ்வாய் 2020 திட்டம் – மீயொலி வான்குடை மிதவை

November 23 , 2017 2587 days 908 0
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா  மீயொலி தரையிரங்கு வான்குடை மிதவையை (Supergmic landing Parachute) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது  இதன் மூலம் இது 2020-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ள செவ்வாய் தரையியக்க ஊர்தி திட்டத்தில் (Mars Rover Mission) பயன்படுத்தப்பட உள்ளது.
  • இந்த திட்டமானது 2020-ல் விண்ணில் செலுத்தப்பட்ட பின் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் விநாடிக்கு 5.4 கி.மீ வேகத்தில் தரையிரங்க உள்ள விண்கலத்தின் வேகத்தை மட்டுப்படுத்த தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பாராசூட்டையே பெரிதும் சார்ந்துள்ளது.
  • இந்த சோதனையானது நாசாவின் அதி நவீன மீயொலி வேக பாராசூட் ஆராய்ச்சி, சோதனை திட்டத்தின் (ASPIRE – Advanced Supersonic Parachute Inflation Research Experiment) கீழ் உள்ள செவ்வாய் 2020 பாராசூட் சோதனை தொடரின் முதல் சோதனையாகும்.
  • செவ்வாய் 2020 தரையியக்க ஊர்தி திட்டமானது நாசாவின் செவ்வாய் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சிவப்பு நிறமுடைய செவ்வாய் கிரகத்தில் ரோபோட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்ய மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால முயல்வாகும்.
  • இந்த திட்டத்தின் கீழ் விண்கலமானது 2020ஆம் ஆண்டின் ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் ஏவப்படும்.
  • ஏனெனில் அக்காலத்தின் போது தான் செவ்வாயில் விண்கலம் தரையிரங்க ஏதுவான வகையில் பூமியும், செவ்வாயும் ஒன்றுக்கொன்று நல்ல நிலையில் சுற்றுவட்டப் பாதையில் அமைந்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்