அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மீயொலி தரையிரங்கு வான்குடை மிதவையை (Supergmic landing Parachute) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இதன் மூலம் இது 2020-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ள செவ்வாய் தரையியக்க ஊர்தி திட்டத்தில் (Mars Rover Mission) பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டமானது 2020-ல் விண்ணில் செலுத்தப்பட்ட பின் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் விநாடிக்கு 5.4 கி.மீ வேகத்தில் தரையிரங்க உள்ள விண்கலத்தின் வேகத்தை மட்டுப்படுத்த தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பாராசூட்டையே பெரிதும் சார்ந்துள்ளது.
இந்த சோதனையானது நாசாவின் அதி நவீன மீயொலி வேக பாராசூட் ஆராய்ச்சி, சோதனை திட்டத்தின் (ASPIRE – Advanced Supersonic Parachute Inflation Research Experiment) கீழ் உள்ள செவ்வாய் 2020 பாராசூட் சோதனை தொடரின் முதல் சோதனையாகும்.
செவ்வாய் 2020 தரையியக்க ஊர்தி திட்டமானது நாசாவின் செவ்வாய் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சிவப்பு நிறமுடைய செவ்வாய் கிரகத்தில் ரோபோட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்ய மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால முயல்வாகும்.
இந்த திட்டத்தின் கீழ் விண்கலமானது 2020ஆம் ஆண்டின் ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் ஏவப்படும்.
ஏனெனில் அக்காலத்தின் போது தான் செவ்வாயில் விண்கலம் தரையிரங்க ஏதுவான வகையில் பூமியும், செவ்வாயும் ஒன்றுக்கொன்று நல்ல நிலையில் சுற்றுவட்டப் பாதையில் அமைந்திருக்கும்.