நாசாவின் (NASA - National Aeronautics and Space Administration) “இன்சைட்” என்ற தரையிறங்கும் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் “செவ்வாய் நிலநடுக்கம்” என்று பெரும்பாலும் நம்பக்கூடிய ஒரு வகை நிலநடுக்கத்தைக் கண்டறிந்துள்ளது.
நாசாவின் இன்சைட் (Insight) என்பது நிலநடுக்கம் சார்ந்த ஆய்வுகள், நிலப் பரப்பியல் மற்றும் வெப்பக் கடத்தல் ஆகியவற்றின் மூலம் செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியை ஆராய்வது என்பதாகும்.
செவ்வாயின் “உட்புறப் பகுதியை” பற்றி விரிவாக ஆய்வு செய்யும் முதலாவது விண்வெளி எந்திரவியல் ஆராய்ச்சி இதுவாகும்.
உட்புற அமைப்புகள் குறித்த இந்த ஆய்வானது நமது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் உள்ள பாறைக் கோள்களின் ஆரம்ப காலத் தோற்றம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க உதவும்.