நாசா அமைப்பானது செவ்வாய் பெர்சிவரென்ஸ் ரோவர் (ஆய்வு வாகனம்) 2020 என்று பெயரிடப்பட்ட செவ்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
செவ்வாய் ரோவரானது 2021 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ரோவரானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கேன்வரல் விமானப் படைத் தளத்திலிருந்து அட்லஸ் V-541 என்ற ஏவு வாகனத்தினால் செலுத்தப் பட்டது.
செவ்வாய் பெர்சிவரென்ஸ் ரோவர் ஆனது “இன்ஜெநியுட்டி” என்ற பெயரிடப்பட்ட முதலாவது கிரகங்களுக்கிடையிலான ஒரு வானூர்தியை நிலைநிறுத்தும் ஒரு இயந்திர மனிதனைக் கொண்டுள்ளது.