செவ்வாய்க் கிரகத்தினை ஒத்தச் சூழல்களில் வாழும் கடற்பாசிகள்
April 17 , 2025 3 days 54 0
முதல் முறையாக, சில கடற்பாசி இனங்கள் செவ்வாய்க் கிரகத்தைப் போன்ற சில சூழல்களில் உயிர்வாழ முடியும் என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதில் வளர்சிதை மாற்ற ரீதியாக செயல்பாட்டில் இருப்பதோடு, அயனியாக்கக் கதிர் வீச்சுக்கு உட்படுதலும் அடங்கும்.
இந்த ஆய்வு ஆனது அவற்றின் மாறுபட்டப் பண்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட டிப்ளோஸ்கிஸ்டெஸ் மஸ்கோரம் மற்றும் செட்ராரியா அகுலேட்டா ஆகிய இரண்டு வகையான கடற்பாசிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
இவை இரண்டும் செவ்வாய்க் கிரகத்தினை ஒத்தச் சூழல்களைக் கொண்ட மாதிரி அறையில் ஐந்து மணி நேர ஆய்வில் உட்படுத்தப்பட்டன என்பதோடு இது செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலம், அழுத்தம், வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் கதிர்வீச்சைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.