செவ்வாய்க் கிரகத்தில் ஆதிகாலக் கடல்
November 12 , 2024
16 days
101
- சீனாவின் ஜுராங் உலாவிக் கலத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகளானது, செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்ததாகக் கூறுகிறது.
- வண்டல் படிவுகள், மண் எரிமலைகள் மற்றும் பள்ளங்கள் ஆகியவை கடந்த காலத்தில் அங்கு ஒரு பெரிய நீர்நிலை இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன.
- இந்தக் கண்டுபிடிப்பு ஆனது செவ்வாய்க் கிரகம், ஒரு காலத்தில் மிகவும் வெப்பமான வளிமண்டலத்துடன் கூடிய வாழக் கூடிய கிரகம் என்ற கோட்பாட்டை ஆதரிக்கிறது.
- சுமார் 3.68 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடோபியா பிளானிஷியா நீரினால் சூழப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
- அந்தக் கடல் சுமார் 3.42 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகத் தெரிகிறது.
- நமது சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களைப் போலவே செவ்வாய்க் கிரகமும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.
Post Views:
101