TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பள்ளங்களுக்குப் பெயரிடல்

June 17 , 2024 160 days 172 0
  • அகமதாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (PRL) அறிவியல் ஆய்வாளர்கள் செவ்வாய்க் கிரகத்தில் மூன்று புதிய பள்ளங்களைக் கண்டறிந்து உள்ளனர்.
  • மறைந்த புகழ்பெற்ற காஸ்மிக் கதிர் இயற்பியலாளர் தேவேந்திர லால் மற்றும் வட இந்தியாவில் உள்ள முர்சன் மற்றும் ஹில்சா ஆகிய நகரங்களின் பெயரால் இந்த மூன்று பள்ளங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.
  • முர்சன் மற்றும் ஹில்சா ஆகியவை முறையே உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் அமைந்துள்ள ஊர்களின் பெயர்கள் ஆகும்.
  • இந்த செந்நிறக் கிரகத்தின் தர்சிஸ் எரிமலைப் பகுதியில் இந்த மூன்று பள்ளங்கள் அமைந்துள்ளன.
  • தர்சிஸ் என்பது செவ்வாய்க் கிரகத்தின் மேற்கு அரைக்கோளத்தில் மத்திய ரேகைக்கு அருகில் அமைந்த ஒரு பரந்த எரிமலை பீடபூமி ஆகும்.
  • இப்பகுதியில் சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய எரிமலைகள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்