TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் கரிமப் பொருள்

October 9 , 2022 781 days 428 0
  • செவ்வாய்க் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதியின் கழிமுகத்தில் இருந்து பல கரிமப் பாறை மாதிரிகளை பெர்ஸெவரன்ஸ் உலாவிக் கலமானது சேகரித்துள்ளது.
  • இந்த மாதிரிகள் தற்சமயம் எதிர்கால செவ்வாய்க் கிரகத்திற்கான ஆய்வு கலங்களால் சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்பட உள்ள தொகுப்புகளோடுச் சேர்த்து வைப்பதற்காகச் சேமித்து வைக்கப்பட உள்ளது.
  • இந்த ஆய்வுப் பணி தொடங்கியதிலிருந்து இதுவரை சேமிக்கப்பட்ட மாதிரிகளில், இந்தப் பாறை மாதிரிகள் அதிக கரிமப் பொருட்களின் செறிவைக் கொண்டுள்ளன.
  • சமீபத்தியச் சேகரிப்புடன், இந்த உலாவிக் கலம் தற்போது மொத்தம் 12 மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
  • பெர்ஸெவரன்ஸ் கலம் சேகரித்தப் பாறைகளில் ஒன்றிற்கு வைல்ட்கேட் ரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது.
  • பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, உப்பு நீர் ஏரியில் சேறும் மணலும் ஆவியாகிப் போனதால் இந்தப் பாறை உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்