TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் சுழல் காற்று

December 1 , 2023 361 days 276 0
  • நாசாவின் ‘ஆறு சக்கர புவியியல் ஆய்வுக் கருவியான,’ பெர்சீவெரன்ஸ் என்ற உலாவிக் கலமானது, செவ்வாய்க் கிரகத்தில் தூசுக்கள் நிறைந்த சுழல் காற்றினைத் தனது ஒளிப் படக் கருவியில் படம் பிடித்துள்ளது.
  • இந்த சுழல் காற்றானது, பூமியில் நிகழும் சுழல் காற்றினை போன்றே உள்ளது.
  • பொதுவாக, செவ்வாய்க் கிரகத்தில் நிகழும் சுழல்காற்றுகள் நமது கிரகத்தில் காணும் சுழல் காற்றினை விட சிறியதாக இருக்கும்.
  • ஆனால் சுழல் காற்றின் தாக்கமற்ற பகுதியின் அடிப்படையிலான கணக்கீடுகளின் படி, இவை சுமார் இரண்டு கிலோமீட்டர் (1.2 மைல்) உயரம் இருந்தது.
  • இது ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் ஏற்படும் வழக்கமான சுழல் காற்றினை விட மிக உயரமானது என்பதோடு, இது அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை விட ஐந்து மடங்கு உயரம் ஆகும்.
  • இந்த உலாவிக் கலமானது, “தோரோஃபேர் முகடு” என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஏற்பட்ட இந்த சுழல் காற்றினைப் பதிவு செய்துள்ளது .
  • இது பெர்சீவெரன்ஸ் உலாவிக் கலத்தில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் அல்லது 2.5 மைல் தொலைவில் இருந்தது.
  • இது மணிக்கு 19 கிலோமீட்டர் அல்லது 12 மைல் வேகத்தில் நகர்ந்தது.
  • தற்போதைய மதிப்பீட்டின்படி, அதன் அகலம் சுமார் 200 அடி (அல்லது 60 மீட்டர்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்