TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் பெர்செவரன்ஸ் தரையிறக்கம்

February 23 , 2021 1376 days 666 0
  • அமெரிக்காவின் நாசா அனுப்பிய பெர்செவரன்ஸ் ஊர்தி ஆனது செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
  • இது செவ்வாய் என்ற சிவப்புக் கிரகத்திலிருந்து அதன் பாறைகளின் மாதிரிகளைச்  சேகரிக்கும்.
  • அங்கு தரையிறங்கிய பிறகு, இரண்டு ஹசார்ட் கேமராக்கள் (Hazard Cameras - Hazcams) அந்த ஊர்தியின் முன் மற்றும் பின்புறத்திலிருந்துப் புகைப்படங்களை எடுத்தன.
  • இது தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட உயர் தெளிவுத் திறன் கொண்ட வண்ண சுய-புகைப்படம் உள்ளிட்ட செவ்வாய்க் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பியது.
  • செவ்வாய்க் கிரகத்திற்கான பெர்செவரன்ஸ் திட்டத்தின் ஒரு முக்கிய குறிக்கோளானது செவ்வாயில் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடுவதை உள்ளடக்கிய ஒரு விண்வெளி உயிரியல் ஆய்வாகும்.
  • இது செவ்வாய்க் கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டரான Ingenuity என்ற கருவியைக் கொண்டு செல்லும்.
  • நாசாவானது மற்றொரு கிரகத்தில் அல்லது செயற்கைக் கோளில் ஒரு ஹெலிகாப்டரைப் பறக்க விடுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்