TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி காணப்படும் ஒற்றை அலைகள்

January 24 , 2023 545 days 264 0
  • செவ்வாய்க் கிரகத்தில் ஒற்றை அலைகள் அல்லது தனித்துவமான மின் புல ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்தியப் புவிக் காந்தவியல் நிறுவனத்தின் (IIG) வானியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
  • அலைத் துகள் தொடர்புகள் ஆனது, துகள்களின் ஆற்றலேற்றம், பிளாஸ்மா இழப்பு, இயக்கம் போன்றவற்றை நேரடியாகக் கட்டுப்படுத்துவதால், இந்த அலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது முக்கியமான ஒன்றாகும்.
  • ஒரு கிரகத்தைச் சுற்றி காணப்படும் காந்தப் புலத்தாலான ஒரு கவசமாக பூமியானது தன்னைச் சுற்றி ஒரு காந்த மண்டலத்தைக் கொண்டுள்ளது.
  • செவ்வாய்க் கோளானது, அதன் மேலோட்டுக் காந்த மூலங்களிலிருந்துப் பெறப்படும் பலவீனமான காந்தப் புலத்தை மட்டுமே கொண்டுள்ளது.
  • இது சூரியக் காற்றுகளை செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து, ஒற்றை அலைகளை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.
  • ஒற்றை அலைகள் என்பது, நிலையான அலைவீச்சுக் கூறு தொடர்புகளைப் பின்பற்றச் செய்யும் தனித்துவமான மின்புல ஏற்ற இறக்கங்கள் (இருமுனை அல்லது ஒற்றை முனை) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்