TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தைத் தாக்கும் விண்வெளிப் பாறைகள்

October 16 , 2022 645 days 312 0
  • நாசாவின் இன்சைட் என்ற தரையிறங்கும் கலமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பைத் தாக்கி வரும் நான்கு விண்வெளிப் பாறைகளின் அதிர்வுகளை 'பதிவு செய்து' கண்டறிந்துள்ளது.
  • ஒரு விண்கலமானது, நில அதிர்வு மற்றும் ஒலி அலைகள் ஆகிய இரண்டையும் ஒரு தாக்கத்தின் மூலம் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
  • 2018 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய பிறகு, இன்சைட் கலம் கண்டறிந்த முதல் தாக்கம் இதுவாகும்.
  • இன்சைட் கலம் கண்காணித்த விண்வெளிப் பாறைகள் - ஒன்று 2020 ஆம் ஆண்டில் மோதிய போதும் மற்றொன்று 2021 ஆம் ஆண்டில் மோதிய போதும் கண்டறியப்பட்டது.
  • செவ்வாய்க் கிரகமானது, நமது சூரிய மண்டலத்தின் குறுங்கோள் மண்டலத்திற்கு அருகாமையில் உள்ளது.
  • இது பூமியை விட மிக அதிகமாக விண்வெளிப் பாறைகளால் தாக்கப்பட்டு பாதிக்கப் படக் கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்