நாசா நிறுவனமானது, தனது இன்சைட் செவ்வாய்க் கிரக தரையிறங்கு விண்கலம், எந்தவொருக் கிரகத்திலும் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய நிலநடுக்கம் செவ்வாய் கோளில் பதிவானதாகக் கண்டறிந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த உலாவி விண்கலமானது, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் முதன்முதலில் தரையிறங்கியது.
அதன் பின்னர் 1,313 நிலநடுக்கங்களை இது பதிவு செய்துள்ளது.
பூமியில் நிலநடுக்கங்கள் மேலோட்டு இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றன.
இருப்பினும், செவ்வாய்க்கிரகத்தில் மேலோட்டு இயக்கங்கள் இல்லை என்பதால் அதன் மேலோடு ஒரு மாபெரும் தட்டு போன்ற அமைப்பாகும்.
எனவே, பாறைப் பிளவுகள் அல்லது கோளின் மேலடுக்கில் ஏற்பட்ட பிளவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களால் ‘செவ்வாய்க் கோளில் நிலநடுக்கம்’ ஏற்படுகிறது.