TNPSC Thervupettagam

செவ்வாய்க் கோளில் நிலநடுக்கம்

May 14 , 2022 834 days 434 0
  • நாசா நிறுவனமானது, தனது இன்சைட் செவ்வாய்க் கிரக தரையிறங்கு விண்கலம், எந்தவொருக் கிரகத்திலும் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய நிலநடுக்கம் செவ்வாய் கோளில் பதிவானதாகக் கண்டறிந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
  • இந்த உலாவி விண்கலமானது, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் முதன்முதலில் தரையிறங்கியது.
  • அதன் பின்னர் 1,313 நிலநடுக்கங்களை இது பதிவு செய்துள்ளது.
  • பூமியில் நிலநடுக்கங்கள் மேலோட்டு இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றன.
  • இருப்பினும், செவ்வாய்க் கிரகத்தில் மேலோட்டு இயக்கங்கள் இல்லை என்பதால்  அதன் மேலோடு ஒரு மாபெரும் தட்டு போன்ற அமைப்பாகும்.
  • எனவே, பாறைப் பிளவுகள் அல்லது கோளின் மேலடுக்கில் ஏற்பட்ட பிளவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களால் ‘செவ்வாய்க் கோளில் நிலநடுக்கம்’ ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்