TNPSC Thervupettagam

செஸ் ஒலிம்பியாட் போட்டி 2024

September 27 , 2024 17 hrs 0 min 116 0
  • ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் (2024) இந்தியா இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • இந்தியக் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ் டோமராஜு, அர்ஜுன் எரிகைசி, மற்றும் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு ஆகியோர் இந்திய ஆடவர் பிரிவில் தங்கம் வென்றனர்.
  • மகளிர் பிரிவில் இறுதிச் சுற்றில் இந்திய அணியானது அஜர்பைஜான் அணியினை வீழ்த்தி முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
  • ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஒட்டு மொத்தமாக சிறந்த செயல்திறன் கொண்ட அணிக்கு வழங்கப்படும் கப்ரின்டாஷ்விலி கோப்பையையும் இந்தியா வென்றது.
  • டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தனிநபர் பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டி என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சதுரங்கப் போட்டியாகும் என்ற நிலையில் இதில் உலக நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்