மத்திய அரசு ஆனது, சுகன்யா சம்ரித்தி யோஜனாவை சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் 2024 என்றும், தபால் அலுவலக கால வைப்புநிதித் திட்டத்தை திருத்தப்பட்ட வட்டி விகிதங்களுடன் தேசிய சேமிப்பு கால வைப்புநிதித் திட்டம் என்றும் மறுபெயர் இட்டுள்ளது.
இந்தத் திட்டம் சுகன்யா சம்ரித்தி கணக்கு (திருத்தம்) திட்டம், 2024 என்று அழைக்கப் படும் என்பதோடு, இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு கணக்கில் வைக்கப் படும் வைப்பு நிதிகளுக்கு 8.2 சதவிகிதம் வட்டி கிடைக்கப் பெறும்.