முன்னதாக வாடிக்கையான குற்றவாளிகளுக்கான இடமாக நியமிக்கப்பட்ட சேலம் மத்தியச் சிறையானது, தற்போது சாதாரண சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
1862 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட சேலம் மத்திய சிறைச் சாலையானது 1934 ஆம் ஆண்டு இளம் வயது கைதிகளை தங்க வைப்பதற்காக என்று கட்டமைக்கப் பட்ட ஒரு பின் இணைப்புப் பகுதியினை உள்ளடக்கியதாகும்.
162 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் ஆனது சேலம் மத்தியச் சிறையை சாதாரண சிறைச்சாலையாக மறுவகைப்படுத்தியது.
சேலம் மத்தியச் சிறைச்சாலையில் பல தொழிற்சாலைகள் மற்றும் ஒரு திறந்தவெளி சிறை (பண்ணை வேலைகள் மேற்கொள்ளும் வகையிலான சிறை) உள்ளது.