TNPSC Thervupettagam

சேவை சார்ந்த வர்த்தகக் கட்டுப்பாடு குறியீடு (STRI)

February 20 , 2023 672 days 373 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான சேவை சார்ந்த வர்த்தகக் கட்டுப்பாடு குறியீட்டில் (STRI) இந்தியா 47வது இடத்தில் உள்ளது.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (OECD) இந்தக் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டது.
  • ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யா இந்தக் குறியீட்டில் 48வது இடத்திற்கு சரிந்தது.
  • சேவை சார்ந்த வர்த்தகக் கட்டுப்பாடு குறியீடானது, அந்தத் துறைகள் மற்றும் தொழிற் சாலைகளில் உள்ள வர்த்தகம் செய்வதை எளிமையாக்கச் செய்தலை மேம்படுத்தும் அரசாங்கத்தின் பல துறை கொள்கைகளைக் கருத்தில் கொள்கின்றன.
  • இந்தக் குறியீட்டின்படி, சுழியம் என்பது குறைந்தபட்சக் கட்டுப்பாடுகள் உள்ளது என்பதனையும், ஒன்று என்பது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒரு நிலையினையும் குறிப்பிடுகிறது.
  • இந்தத் தரவுத் தளமானது வர்த்தகம் செய்ய மிகவும் விரும்பத் தகுந்த தேசம் என்ற ஒரு அந்தஸ்தின் அடிப்படையிலான விவரங்களையும் பதிவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்