சர்வதேச காது கேளாதோருக்கான வாரத்தோடு சேர்த்து சர்வதேச சைகை மொழிகளுக்கான தினமானது ஆண்டுதோறும் செப்டம்பர் 23ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த வருடம் சர்வதேச சைகை மொழிகளுக்கான முதலாவது தினம் ஆகும். இதன் கருத்துரு “சைகை மொழிகளுடன் சேர்த்து ஒவ்வொருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.”
இந்த தினம் காது கேளாதவர்களின் மனித உரிமைகளை, அவர்கள் அதிகபட்சமாக உணரும் வகையில் சைகை மொழிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்ப எண்ணுகின்றது.
உலக காது கேளாதவர்களுக்கான கூட்டமைப்பால் (World Federation of the Deaf - WFD) சர்வதேச சைகை மொழிகளுக்கான தினம் முன்மொழியப்பட்டது.
ஐ.நா. பொதுச்சபை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தினத்தை நிறுவியது. மேலும் இத்தினம் 1951ம் ஆண்டு உலக காதுகேளாதவர்களுக்கான கூட்டமைப்பை நிறுவிய தினமான செப்டம்பர் 23ம் தேதியோடு பொருந்திப்போகும் வகையில் உள்ளது.