TNPSC Thervupettagam

சைட்டிரிடியோமைகோசிஸ்

April 11 , 2019 1927 days 580 0
  • சைட்டிரிடியோமைகோசிஸ் என்பது நீர் நில வாழ்விகளை (ஈரிட வாழ்விகள்) பாதிக்கக் கூடிய ஒரு கொடிய தொற்றும் நோயாகும்.
  • இது “பாடராசோசிடிரியம் டென்ட்ரோபேட்டிடிஸ்” என்ற பூஞ்சையினால் ஏற்படுகின்றது.
  • இந்தப் பூஞ்சையானது தவளைகள், தேரைகள் மற்றும் ஈரிட வாழ்விகளின் தோலைத் தாக்குகிறது.
  • இந்த உயிரினங்கள் சுவாசிக்கவும் உடலில் உள்ள நீரின் அளவை ஒழுங்குபடுத்தவும் தோலைப் பயன்படுத்துகின்றன. இந்த நோயினால் ஏற்படும் பாதிப்பானது இறுதியில் இதயச் செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துகின்றது.
  • இது “முதலாவது உலகளாவிய கொடிய நோய் பிரச்சனை” என்று விவரிக்கப்படுகின்றது. இதன் விளைவாக 90 இனங்கள் முற்றிலும் அழிந்து போயின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்