இணையத் தாக்குதலுக்கு எதிரான இணையப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை அரசுத் துறைகளுக்கிடையே வலுப்படுத்துவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சைபர் சுரக்ஷித் பாரத் (Cyber Surakshit Bharat) எனும் திட்டத்தைத் துவங்கியுள்ளது.
சைபர் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை பரப்புவதும், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அரசுத் துறைகளின் முதல்நிலை ஐ.டி. பணியாளர்கள் மற்றும் மத்திய தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் திறன்களை கட்டமைப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
நாட்டு மக்களின் தரவுகளினை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே சைபர் சுரக்ஷித் பாரத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.