மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் இந்திய தரவு பாதுகாப்பு ஆணையம் (DSCI - Data Security Council of India) ஆகியவை இணைந்து சைபர் ஷிக்ஷா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த சைபர் ஷிக்ஷா திட்டமானது இணைய பாதுகாப்பு துறையில் பெண் பொறியியல் பட்டதாரிகளின் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் (MeiTY) இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் நிலை (Tier) நகரங்களிலிருந்து போதிய அளவு பெண்களை இணைய பாதுகாப்பு துறையின் ஒரே தொழில் பாதையில் ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் (CDAC - Centre for Development of Advanced Computing) இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பயிற்சியளிக்கும்.