TNPSC Thervupettagam
June 21 , 2019 1985 days 677 0
  • பற்கள் மற்றும் ரோமங்களுடன் பாதுகாக்கப்பட்ட 40,000 ஆண்டுகள் பழமையான துண்டிக்கப்பட்ட ஓநாய் தலை ஒன்று கிழக்கு சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது ரஷ்யாவின் சைபீரியாவில் யகுதிப் பகுதியில் உள்ள டையர்கெத்யாக் நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது பனி ஊழிக் காலத்தின் ப்ளைட்டோசீன் சகாப்தத்தின்போது (Pleistocene era) வாழ்ந்துள்ளது.
  • புவி வெப்பமடைதல் மற்றும் நிரந்தரமாக இருக்கும் பனிகள் உருகுதல் ஆகியவற்றின் காரணமாக இது போன்றவைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பனிகட்டிகளுக்குள் உறைந்த நிலையில் திரவ இரத்தம் மற்றும் சிறுநீர் கழிவுகளுடன் 42,000 ஆண்டுகள் பழமையான இளங்குதிரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இது நிரந்தரப் பனிக்கட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது.
  • ஒரு பனி யுகம் என்பது பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் வெப்பநிலையில் நீண்ட நாள் குறைவாகும். இதன் விளைவாக கண்ட மற்றும் துருவ பனிக்கட்டிகள், ஆல்பைன் பனிப்பாறைகள் அங்கு உருவாகின்றன அல்லது விரிவடைகின்றன.
  • பூமி தற்போது நான்காம் நிலை பனிப் பாறையாக்கத்தில் உள்ளது. இது பிரபலமாக பனி யுகம் என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்