சைப்ரஸுக்கு அருகில் நீருக்கடியில் அமைந்த பள்ளத்தாக்கு
February 10 , 2024 288 days 328 0
சைப்ரஸ் அருகே இதுவரை அறிந்திராத நீருக்கடியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஒன்றினை இஸ்ரேலிய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் பள்ளத்தாக்கு, அதன் அருகில் அமைந்த நீரடி மலையின் பெயரால் எரடோஸ்தீனஸ் என்று அழைக்கப்படுகிறது.
இது சுமார் 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மெசினியன் உவர்தன்மை அதிகரிப்பு நிகழ்வின் போது தோன்றியது.
இந்தப் பள்ளத்தாக்கு சுமார் 10 கிமீ அகலமும் 500 மீ ஆழமும் கொண்டது என்பதோடு இது உப்புப் படிவுகள் படிவதற்கு முன்னதாக மெசினியன் காலத்தின் தொடக்கத்தில் புதையுண்டது.
மெசினியன் காலத்தில் மத்தியத் தரைக் கடல் மட்டம் குறைந்ததால், கடல் நீரின் உப்புத்தன்மை அதிகரித்ததன் காரணமாக, எரடோஸ்தீனஸ் பள்ளத்தாக்கு உருவாகச் செய்தது.