சைமோன் பைல்ஸ் என்பவர் தனது 25வது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஆண் அல்லது பெண் என்ற எந்த ஒரு பிரிவிலும் "மிகவும் புகழ்பெற்ற" உடற்பயிற்சி வல்லுநர்என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் ‘பேலன்ஸ் பீம்’ மீதான அவரது சிறப்பான செயல்திறன் அவருக்கு 15.066 புள்ளிகளைப் பெற்றுத் தந்தது.
பெலாரசைச் சேர்ந்த ஆண் உடற்பயிற்சி வல்லுநரான விட்டலி ஷெர்போ பெற்ற 23 பதக்கங்கள் என்ற நீண்டகால சாதனையை இவர் முறியடித்தார்.
சைமன் பைல்ஸ் என்பவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஆவார். இவர் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற உடற்பயிற்சி வல்லுநர் ஆவார்.