கர்நாடகா - ஹரியானா அணிகள் பங்கேற்ற சையத் முஷ்டாக் அலி டி20 அரையிறுதிப் போட்டியில், அபிமன்யு மிதுன் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
டி20 போட்டியின் வரலாற்றில் ஆறு பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளராக அவர் திகழ்கின்றார் (39க்கு 5). இதில் அவர் தொடர்ச்சியாக எடுத்த மூன்று விக்கெட்டுகளும் அடங்கும்.
1936 ஆம் ஆண்டில் ஓல்ட் டிராஃபோர்டு என்னுமிடத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 112 ரன்கள் எடுத்த இந்திய வீரரான சையத் முஸ்தாக் அலியின் நினைவாக (வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த முதல் வீரர் என்னும் பெருமையைப் பெற்றவர்) இந்தப் போட்டிக்கு இப்பெயரிடப் பட்டுள்ளது.