TNPSC Thervupettagam

சைலோபிஸ் தீபக்கி

May 10 , 2021 1354 days 718 0
  • இந்திய இருவாழ்விகள் உயிரியல் (herpetologist) வல்லுநரான தீபக் வீரப்பனின் நினைவாக சிறிய பாம்பு ஒன்றிற்கு சைலோப்ஸ் தீபக்கி என பெயரிடப்பட்டுள்ளது.
  • மரத்தில் வாழும் பாம்பு இனங்களைப் பட்டியலிடுவதற்காக சைலோபைனே எனப்படும் ஒரு புதிய துணைக் குடும்பத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக இந்தக் கௌரவமானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த இனத்திற்குப் பெயரிடுவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பெயர் “தீபக்கின் மரப் பாம்பு” என்பதாகும்.
  • சைலோபிஸ் தீபக்கி என்பது வெறும் 20 செ.மீ. நீளமுள்ள ஒளிரும் செதில்களையுடைய ஒரு சிறிய பாம்பு வகையாகும்.
  • இந்த பாம்பு இனமானது கன்னியாகுமரியின் தென்னந் தோப்புகளில் காணப் படுகிறது.
  • இந்த பாம்பு இனமானது தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது எனவும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியின் சில இடங்களிலும் இவைக் காணப் படுவதாகவும் கூறப்படுகிறது.
  • இவை வறண்டப் பகுதிகளிலும் அகத்திய மலையைச் சுற்றியுள்ள தாழ் உயரப் பகுதிகளிலும் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்