சொத்துகள் தொடர்பான துறை ஆலோசக நிறுவனமான நைட் ஃபிராங்க் சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு ‘சொத்து அறிக்கையினை' வெளியிட்டது.
உலக நாடுகளில் ஆடம்பர (சொகுசு) வீடுகளின் விலை உயர்வுப் பட்டியலில் 92 வது இடத்தில் இருந்த மும்பை மாநகரம் 37 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மும்பையின் பிரதான (உயர்மதிப்பு) சொத்துச் சந்தையானது, உலகளவில் 6.4 சதவீதம் விலை உயர்வினைக் கண்டுள்ளது.
உயர்மதிப்புச் சொத்துகளின் விலைகளில் 3 சதவீதம் என்ற உயர்வுடன் பெங்களூரு நகரமானது 62வது இடத்தில் உள்ளது.
இதில் 1.2 சதவீத உயர்வுடன், 2021 ஆம் ஆண்டில் 93வது இடத்திலிருந்த டெல்லி 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த அறிக்கையானது, 2022 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள ஆடம்பர வீடுகளின் விலையானது ஆண்டிற்கு 5.2 சதவீதம் (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் துபாயில் உள்ள உயர்மதிப்புக் குடியிருப்புகளின் விலைகள் 44.2 சதவீதம் உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
கொலராடோவின் ஆஸ்பென் நகரம் 27.6 சதவீத விலை உயர்வுடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து ரியாத் (25 சதவீதம்) இடம் பெற்றுள்ளது.