சீனா தனியார் நிறுவனத்தினால் தயார் செய்யப்பட்ட தனது முதல் இராக்கெட்டை வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஏவியுள்ளது.
தனியார் நிறுவனத்தினால் தயார் செய்யப்பட்ட இந்த இராக்கெட்டின் பெயர் சொங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார் என்பதாகும்.
இந்த இராக்கெட்டானது பெய்ஜிங்கில் அமைந்துள்ள ஒன் ஸ்பேஸ் டெக்னாலஜி (One Space Technology) எனும் தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தனியார் நிறுவனத்தின் இராக்கெட் ஏவுதலானது அரசு அல்லாத நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஓர் சீன இராக்கெட் வெற்றிகரமாக விண்ணின் சுற்றுவட்டப்பாதையில் முதல்முறையாக வெற்றிகரமாக நுழைந்துள்ளதைக் குறிக்கின்றது.
திட எரிபொருள் என்ஜினால் (solid fuel engine) ஆற்றலூட்டப்பட்ட இந்த இராக்கெட்டானது OS-XO என்றும் அழைக்கப்படுகின்றது.