2021 ஆம் ஆண்டில், உலகளவில் அதிகமான பில்லியனர்கள் எண்ணிக்கையினைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
“நைட் ஃபிராங்” என்ற அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு சொத்து அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள அதிஉயர் நிகரச் சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் (ultra-high-net-worth individuals) எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 11% அதிகரித்து ஆண்டிற்கு 145 பில்லியனர்களாக உள்ளது.
இது ஆசிய பசிபிக் பகுதியின் மிக அதிக சதவீத உயர்வு ஆகும்.
அதிஉயர் நிகரச் சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் என்போர் 30 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட (ரூ. 226 கோடி) மதிப்பிலான நிகர சொத்துகளைக் கொண்டு உள்ளவர்கள் ஆவர்.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா (748) மற்றும் சீனா (554) ஆகியவை முறையே முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன.
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் பெங்களூரு நகரில் அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு உள்ள தனிநபர்களின் எண்ணிக்கையானது அதிகளவில் உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை ஆகியவை உள்ளன.