இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 39(b) என்ற பிரிவின் கீழ் அனைத்து வகையிலான தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சரத்து 39(b) ஆனது, பொது மக்களுக்கான ஒரு சிறந்த சேவையினை வழங்குவதற்காக "சமூகத்தின் வளங்கள்" பகிர்ந்தளிக்கப் படுவதை உறுதி செய்வதற்கான பல்வேறு கொள்கைகளை அரசாங்கம் வழிநடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இருப்பினும், இந்த இலக்குடன் மாநிலங்கள் பெருமளவில் ஒருங்கி இருந்தால், குறிப்பிட்ட வழக்குகளில் சில தனிப்பட்டச் சொத்துக்களை உரிமை கோரலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
39(b) சரத்துப் பிரிவினை நடைமுறைப் படுத்துவதற்காக இயற்றப்பட்டச் சட்டங்களை பாதுகாக்கும் "சட்டப் பாதுகாப்பாக" சரத்து 31C உள்ளது.
1971 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (இருபத்தி ஐந்தாவது) திருத்தத்தின் மூலம் பொது உடைமைப் பொருளாதாரக் கொள்கையை பாதுகாப்பதற்கு வேண்டி சரத்து 31C ஆனது சேர்க்கப்பட்டது.
நீதிபதி கிருஷ்ண ஐயர் தலைமையிலான 1978 ஆம் ஆண்டு வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப்பின் படி, எந்தவொரு தனி நபர்களின் சொத்துக்களும் சமூகச் சொத்துகளாகக் குறிப்பிடப் படலாம்.