கடந்த மாதம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசானது, இனி ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய மசோதா கூறுகிறது.
இந்த மசோதாவானது, 1919 ஆம் ஆண்டு சென்னை நகர நகராட்சிக் கழகச் சட்டம், 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்; 1971 ஆம் ஆண்டு மதுரை நகர மாநகராட்சிச்சட்டம்; மற்றும் 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழகச் சட்டம் ஆகிய சட்டங்களில் இந்தப் புதிய விதியினைச் சேர்க்க முயல்கிறது.