உலகளாவிய மனை விற்பனை ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமான நைட் ஃபிராங்க், 2023 ஆம் ஆண்டிற்கான அதன் சொத்து விவரங்கள் குறித்த ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பிரதான மனை சார்ந்த சொத்துச் சந்தையின் போக்குகள் மற்றும் செயல்திறன் பற்றிய நுண்ணறிவுகளை இந்த அறிக்கை வழங்குகிறது.
இந்த மதிப்பீட்டில் பங்கேற்ற இந்தியர்களில், 2022 ஆம் ஆண்டில் UHNWI நபர்களின் (மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள்) செல்வத்தில் 88 சதவீத உயர்வு ஏற்பட்டது.
கடந்த ஆண்டில் இந்தியாவின் அதிக-உயர்-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் செல்வம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
47 சதவீதத்தினர் தங்களின் சொத்து மதிப்பானது, 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
53 சதவீதம் பேர் அவர்களது சொத்துகள் முந்தைய ஆண்டை விட, குறைந்தது 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவின் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் முதலீடு செய்யத் தக்க சொத்துகள் பெரும்பாலும் பங்குகள், வீட்டுமனை மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றில் இடப்பட்டுள்ளது என்றும் இந்தக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
உலகளவில் உள்ள பணக்காரர்களை விட இந்தியாவின் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களால் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யப் பட்டு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.