TNPSC Thervupettagam

‘சொர்க்கலோக அரண்மணை’ விண்வெளி நிலையம்

November 9 , 2018 2208 days 742 0
  • சீனாவானது தனது நிரந்தர விண்வெளி நிலையத்தின் முதல் பிரதி ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இது சர்வதேச சமூகத்தின் விண்வெளியில் சுற்றுகின்ற விண்வெளி ஆய்வகத்திற்குப் பதிலாக மாற்றியமைக்கப்படும். மேலும் இது பூமிக்கு அப்பாலானவற்றில் உள்ளதன் மீதான சீனாவின் பேராவலையும் குறிக்கின்றது.
  • 17 மீட்டர் (55 அடி) நீளமுடைய இந்த மையப்பகுதி அமைப்பானது சீனாவின் தெற்கு கடற்கரை நகரமான ஜூஹையில் சமீபத்தில் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வான்வெளிக் கண்காட்சியில் (Air Show) முக்கிய கவனத்தினைப் பெற்றது.
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது (ISS – International Space Station) 1998ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, ரஷ்யா, கனடா மற்றும் ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளால் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வரும் 2024ம் ஆண்டில் ஓய்வு பெற வேண்டியுள்ளது.
  • இது 400 டன்கள் எடை கொண்ட ISS-ஐ விட மிகச்சிறியதாக இருப்பினும் கால்பந்து மைதானம் அளவிற்கு பெரியதாக உள்ளது. ISSக்குப் பிறகு விண்வெளி சுற்றுப்பாதையில் சீனா மட்டுமே விண்வெளி நிலையத்தைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்