TNPSC Thervupettagam

சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி

March 28 , 2025 5 days 49 0
  • தமிழ் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பொது அறிமுகப் புத்தகம் மற்றும் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியின் முதல் தொகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
  • இந்த முயற்சியானது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமானது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்துடன் இணைந்து செயல்படச் செய்வதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
  • இது தமிழ் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சுமார் 12 தொகுதிகள் கொண்ட சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் G. அரசேந்திரன் தலைமையிலான 20 நிபுணர்கள் கொண்ட குழுவினால் செயலாற்றப்பட்டு வரும் இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 8 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
  • இந்தப் புத்தகத்தின் முதல் தொகுதியானது, இலத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேற்கத்திய இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மற்றும் தமிழிலிருந்து தோன்றிய சமஸ்கிருதம், பாலி மற்றும் சிங்களம் போன்ற கிழக்கு இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் சுமார் 19 சொற்களின் சொற்பிறப்பியல் கருதுகோளின் அடிப்படையில் தொகுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்