இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான ரஞ்சித் குமார் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சொலிசிட்டர் ஜெனரல்
இந்தியாவின் அட்டர்னி ஜெனரலுக்கு உதவிபுரியும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியானது நாட்டின் இரண்டாவது உயரிய சட்ட அதிகாரிப் பணியாகும். அவருக்கு உதவியாக பல கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் இருப்பர்.
சொலிசிட்டர் ஜெனரல் பற்றி அரசியலமைப்பில் எந்த ஒரு குறிப்பும் இல்லை.
இது ஓர் சட்டப்பூர்வ பதவியாகும் (Statutory Post).
3 ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்படுவார்.
நியமனங்களுக்கான கேபினேட் அமைச்சரவை குழு (Appointment Committee of Cabinet) சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களை நியமிக்கின்றது.
ஆனால் அட்டர்னி ஜெனரலை இந்திய குடியரசுத்தலைவர் விதி 76(1) ன் கீழ் நியமிப்பார்.
சொலிசிட்டர் ஜெனரலின் பணிகள் சட்ட அதிகாரிகள் (பணி நிலைகள் ) விதி 1987 ன் படி நிர்வகிக்கப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் படி அல்ல.
அனால் அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் மற்றும் பணிகள் அரசியலைப்பு சட்டத்தின் விதி 76 ன் படி வரையறுக்கப்பட்டுள்ளன.