சோடியம் உட்கொள்ளல் குறைப்பு பற்றிய உலகளாவிய அறிக்கை
March 24 , 2023 612 days 314 0
உலக சுகாதார அமைப்பானது சோடியம் உட்கொள்ளல் குறைப்புப் பற்றி உலகளாவிய அறிக்கை என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலக மக்கள் உட்கொள்ள வேண்டிய சராசரி உப்பின் அளவு ஒரு நாளைக்கு 10.8 கிராம் என்று மதிப்பிடப் பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இளம் பருவத்தினர் உட்கொள்ள வேண்டிய உப்பின் அளவு, ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த அறிக்கையானது ஒவ்வோர் உறுப்பினர் நாடுகளுக்கும் 1 (குறைந்த அளவு) முதல் 4 (அதிக அளவு) வரை என்ற அளவீட்டில் உலக நாடுகளின் சோடியம் மதிப்பெண் அளவினைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பெண் ஆனது சோடியம் குறைப்புக் கொள்கைகள் மற்றும் பிற பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதலின் நிலையினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப் படுகிறது.
உலக நாடுகளின் சோடியம் மதிப்பெண் ஆனது, உலக மக்களின் உணவு சோடியம் உட்கொள்ளல் மற்றும் இருதய நோய்கள் தொடர்பான கொள்கைகளின் முன்னேற்றத்தின் தாக்கத்தை மதிப்பிடப் பயன்படுத்தப் படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் அனைத்து 194 உறுப்பினர் நாடுகளும் 2013 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு உறுதிப்பாடு மேற்கொண்டிருந்தாலும், 5% நாடுகள் மட்டுமே விரிவான சோடியம்-குறைப்பு கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பினர் நாடுகளில், உலக நாடுகளின் சோடியம் மதிப்பெண்ணில் 56 நாடுகள் மதிப்பெண் 1 என்ற மதிப்பெண்ணைக் கொண்டுள்ளன.
98 நாடுகள் தன்னார்வ அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளைச் செயல்படுத்தி அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
இத்தகையக் கொள்கைகள் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் 7 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது.